கொரோனா வைரஸ் தவிர்ப்பதில் முகக் கவசத்தின் பங்கு

Posted on : 2020-02-23
Posted by : Kumaran

Share :

சீனாவின்‌ உஹான்‌ நகரில்‌ மையமிட்‌டுள்ள புதிய கொரோனா வைரஸ்‌ தொற்று உலகெங்கும்‌ பரவி மக்களைப்‌ பெரும்‌ அச்சத்துக்கு ஆளாக்கியுள்‌ளது. தடிமல்‌ போன்ற பாதிப்பை ஏற்படுத்‌தும்‌ இந்த வைரஸ்‌ 2003 ஆம்‌ ஆண்டில்‌ சார்ஸ்‌ என்னும்‌ புதிய வைரஸாக உருவெடுத்து 8 000 பேரைப்‌ பாதித்து 774 பேர்‌ இறக்கக்‌ காரணமாக இருந்தது. 2012 ஆம்‌ ஆண்டில்‌ மெர்ஸ்‌ என்னும்‌ புதிய வைரஸாக உருவெடுத்து 2 506 பேரைப்‌ பாதித்து 862 பேர்‌ இறக்கக்‌ காரணமாக இருந்தது. 2019 ஆம்‌ ஆண்டில்‌ கோவிட்‌ 19 என்கிற கொரோனா வைரஸ்‌' என்னும்‌ புதிய வைரஸாக உருவெடுத்த இந்த வைரஸ்‌ இதுவரை 5௦ ௦0௦௦ பேரைப்‌ பாதித்து 130௦ பேருக்கும்‌ மேலானவர்கள்‌ இறக்கக்‌ காரணமாகி உள்ளது.

தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும்‌ அது பரவி வருகிறது. இவற்றைத்‌ தடுப்பதற்‌குத்‌ தடுப்பூசி எதுவும்‌ இல்லை. சிகிச்சை செய்ய மருந்துகளும்‌ இல்லை. இவ்வைரஸ்‌ நோயாளிகளிடமிருந்து விரைவாகப்‌ பரவுவதால்‌ அதனை தவிர்த்துக்ககாள்வதற்கான ஒரே வழி தற்காப்பேயாகும்‌.

அதன்‌ காரணத்தினால்‌ நோய்த்தொற்‌றுக்கு உள்ளானவரிடமிருந்து ஒதுங்கி இருக்‌கவேண்டும்‌. கைகளை அடிக்கடி சவர்க்கார மிட்டு கழுவிக்‌கொள்ள வேண்டும்‌. தும்மல்‌, இருமல்‌ வரும்போது வாய்ப்‌ பகுதியையும்‌ நாசிப்‌ பகுதியையும்‌ கைக்குட்டையால்‌ மூடிக்கொள்ள வேண்டும்‌. முகக்‌ கவசங்கள்‌ அணிந்து நோய்த்‌தாற்றைத்‌ தவிர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌.

இவ்வாறான ஏற்பாடுகளின்‌ ஊடாக இவ்வைரஸ்தொாற்றைத்‌ தவிர்த்துக்கொள்ளலாம்‌. என்றாலும்‌ முகக்கவசத்தைப்‌ பொறுத்தவரை அறுவை சிகிச்சைகள்‌ மேற்கொள்ளும்‌ மருத்துவர்கள்‌, தாதியர்‌, மயக்க மருந்துகொடுப்பவர்கள்‌, அறுவை சிகிச்சை கூடப்‌ பணியாளர்கள்‌ போன்றோர்‌ பயன்படுத்தும்‌ முகக்கவசம்‌ இவ்வைரஸ்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்தவோ தவிர்க்கவோ தூசி உள்ளிட்ட நுண்துகள்களை வடிகட்டவோ பயன்படாது. அதேபோன்று மரம்‌ அறுத்தல்‌, துளைத்தல்‌, மணல்‌ அரைத்தல்‌, கலவை செய்தல்‌, தோட்ட வேலை போன்ற பணிகளில்‌ ஈடுபடுபவர்கள்‌ பயன்படுத்தும்‌ முக்கக்‌ கவசமும்‌ இவ்வைரஸ்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்தப்‌ பயன்படாது.

ஆனால்‌ அமெரிக்காவில்‌ கிடைக்கும்‌ என்‌ 95 முகக்கவசம்‌, ஐரோப்பாவில்‌ கிடைக்கும்‌ பி2, பி3 முகக்கவசம்‌, கொரியாவில்‌ கிடைக்க பெறும்‌ கே.எப்‌. 94 முகக்‌ கவசம்‌ போன்றவாறானவை கொரோனா போன்ற கொடிய வைரஸ்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்துவதற்கு பெரிதும்‌ பயன்படக்‌ கூடியனவையாகும்‌.

அதேநேரம்‌ என்‌ 95 போன்ற முகக்கவசங்கள்‌ காற்றின்‌ நுண்துகள்களை 95 வீதம்‌ தடுத்து நிறுத்திவிடும்‌. அதனால்தான்‌ இது95 என அழைக்கப்படுகிறது. மேலும்‌ இது 99 சதவீத பக்றீரியா போன்ற நுண்கிருமிகளைத்‌ தடுத்து நிறுத்திவிடும்‌. அதன்‌ பயனாக சுத்தமான காற்றைச்‌ சுவாசிக்கவும்‌ ககாரோனா போன்ற வைரஸ்‌ தொற்றுகளைத்‌ தவிர்த்‌ துக்ககாள்ளவும்‌ இது உதவுவதாக மருத்துவ நிபுணர்கள்‌ தெரிவிக்கின்றனர்‌.

என்‌ 99 முகக்கவசங்ளைப்‌ பொறுத்தவரை காற்றின்‌ நுண்துகள்களை 95 வீதம்‌ வடிகட்டக்‌ கூடியதாக உள்ளது. சுத்தமானகாற்றைச்‌ சுவாசிக்கவும்‌ ககாரோனா போன்ற வைரஸ்‌ தொற்றுகளைத்‌ தடுக்கவும்‌ இவை உதவுகின்றன. இவ்வகை முகக்கவசங்ளை நீண்ட நேரம்‌ அணிய முடியாது. குறிப்பாக நுரையீரல்‌ பாதிப்பு உள்ளவர்கள்‌, இதய நோயாளர்கள்‌ போன்றவர்கள்‌ இவ்வகை முகக்கவசங்களை அணிந்து சுவாசிப்பது மிகவும்‌ சிரமமான காரியமாக இருக்கும்‌.

அதனால்‌ என்‌ 95 முகக்கவசம்‌ என்‌ 99 கவ சத்தை விட 5௦ சதவீதம்‌ குறைவான சுவாச எதிர்ப்பை வழங்குகிறது. மூச்சுத்‌ திணறல்‌ இல்லாமல்‌ இதை நீண்ட காலத்துக்கு அணியலாம்‌. அதனால்‌ அதுவே சிறந்ததாக ஏற்‌கப்பட்டு மருத்துவர்களால்‌ பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த முகக்கவசத்தை சரியான முறையில்‌ முகத்தில்‌ பொருத்தினால்‌ மாத்திரம்‌ தான்‌ இந்நோய்த்‌ தொற்றைத்‌ தவிர்க்கக்‌ கூடியதாக இருக்கும்‌. அதேநேரம்‌ விரும்பியபடி முகக்கவசத்தைக்‌ கழற்றுதல்‌, எடுத்தல்‌, கீழே வைத்தல்‌ போன்ற செயல்களில்‌ ஈடுபடக்‌ கூடாது.

அத்தோடு இந்நோய்‌ வராமல்‌ தடுக்க நினைப்பவர்கள்‌ முகமூடியைக்‌ கழற்றி மறந்துபோய்‌ வெளிப்பகுதியை உட்புறமாகஅணிந்தால்‌ அதில்‌ சேரும்‌ கிருமிகள்‌ மூக்குத்‌துவாரத்தின்‌ ஊடாக எளிதில்‌ உடலைச்‌ சென்று அடையக்கூடிய அச்சுறுத்தலும்‌ உள்ளது. அதன்‌ காரணத்தினால்‌ முகக்‌ கவசத்தை மிகவும்‌ கவனமாகப்‌ பாவிக்க வேண்டும்‌. குறிப்பாக ஒருவர்‌ பயன்படுத்திய முகக்‌ கவசங்களை மற்றவர்‌ கண்டிப்பாகப்‌ பயன்படுத்‌தக்‌ கூடாது. முறையாகப்‌ பயன்படுத்தினால்‌ கொரோனா வைரஸை மட்டுமல்ல காற்றினால்‌ பரவும்‌ எண்ணற்ற கிருமிகளையும்‌ தடுத்து நிறுத்தும்‌ கவசமாக இது இருக்கும்‌.

Share :

சிறப்புக் கட்டுரை

கொரோனா வைரஸ் தவிர்ப்பதில் முகக் கவசத்தின் பங்கு

தொழிற் கல்வி

போட்டிப் பரீட்சை

அரச மொழிபெயர்ப்பாளர் சேவையின் வகுப்பு 1 இல் உள்ள உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைப்பரீட்சை - 2015(2020)

வடக்கு மாகாண பாடசாலைப் பணியாளர், பாடசாலைக் காவலாளி சேவையில் தரம் III, தரம் II மற்றும் தரம் I இல் உள்ளவர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை – 2015 (II) 2020

வர்த்தமானி

CV FORMATS

ஏனையவை

விளையாட்டுப் பாடசாலைகளுக்கு மாணவ மாணவியரை உள்ளீர்ப்பு செய்தல் 2021 - கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விளையாட்டுகளில் தனிச்சிறப்பு வாய்ந்த திறமைகளை / திறன்களைக் கொண்டவர்களுக்கான பல்கலைக்கழக விஷேட அனுமதி - 2019/2020

குறும்படம் மற்றும் சுவரொட்டிப் போட்டி - 2020 / வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு